ஜேர்மனியில் ரயிலில் கோடரித் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
ஜேர்மன் மாகாணமொன்றில், ரயில் ஒன்றில் பொதுமக்கள் மீது கோடரியைக் கொண்டு தாக்கிய ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோடரித் தாக்குதல் நடத்திய நபர்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Straubing என்னுமிடத்தில், ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது திடீரென ஒருவர் கோடரியால் தாக்குதல் நிகழ்த்தத் துவங்கியுள்ளார்.
அந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்தாரி குறித்தோ, அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்தோ பொலிசார் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
உள்ளூர் ஊடகங்கள் சில, அவர் வெளிநாட்டவர் போல் பேசியதாக தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு உருவான நிலையில், அந்த ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |