5 ஸ்டார் ஹோட்டலில் 2 ஆண்டுகள் பணம் செலுத்தாமல் தங்கியிருந்த நபர்; அம்பலமான 58 லட்சம் ரூபாய் மோசடி
தலைநகர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த பெரும் மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹோட்டலில் சுமார் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த விருந்தினர் ஒருவர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கணக்காளர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் சிலரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது, தலைமறைவான விருந்தினர் மற்றும் சில ஓட்டல் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஹோட்டல் நிர்வாகம்.
603 நாட்கள் - பில் ரூ. 58 லட்சம்., நடந்தது என்ன?
அங்குஷ் தத்தா என்ற நபர் 30 மே 2021 அன்று டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் ரோசெட் ஹவுஸ் என்ற ஹோட்டலில் தங்க வந்தார். முதல் நாள் அறையை முன்பதிவு செய்தான். இதைத் தொடர்ந்து அவர் தனது தங்கும் நாட்களை அதிகப்படுத்தினார்.
பின்னர் ஜனவரி 22, 2023 அன்று ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் 603 நாட்கள் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடைய ஓட்டல் பில் ரூ. 58 லட்சம்.
இந்நிலையில், ஹோட்டல் மேலாளர் வினோத் மல்ஹோத்ரா ஐஜிஐ விமான நிலைய காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தார். ஹோட்டலின் முன் அலுவலகத்தில் பணிபுரியும் பிரேம் பிரகாஷ், விருந்தினர் அங்குஷ் தத்தா மற்றும் ஹோட்டலின் வேறு சில ஊழியர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி அம்பலம்
பிரேம் பிரகாஷ் ஹோட்டலின் முன் அலுவலகத்தின் முழு வேலைகளையும் கவனித்துக் கொள்வதாக வினோத் கூறினார். இது தவிர பணம் செலுத்துதல் தொடர்பான வேலைகளையும் அவர் கவனித்து வருகிறார். அங்குஷ் என்பவருடன் சேர்ந்து இந்த இந்த மோசடியை செய்துள்ளார். மேலும் சில ஹோட்டல் ஊழியர்களுடன் இதில் ஈடுபட்டுள்ளனர்.
Image: Shutterstock/Representative
குற்றம் சாட்டப்பட்ட பிரேம், அங்குஷிடம் இருந்து பணம் பெற்று ஹோட்டல் கணினியில் நிறுவப்பட்ட மென்பொருளை சேதப்படுத்தி, விருந்தினர் பற்றிய அனைத்து பதிவுகளையும் நீக்கியதாக கூறப்படுகிறது.
தற்போது, குற்றம் சாட்டப்பட்ட பிரேம் பிரகாஷ், அங்குஷ் தத்தா மற்றும் சில ஓட்டல் ஊழியர்கள் மீது பொலிஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |