ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடம் இருந்து குழந்தையை திருடிய நபர்! வைரல் வீடியோ
ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடம் இருந்து குழந்தையை ஒருவர் திருடிச்சென்றுள்ளார்
அவர் மிகவும் சாதாரணமாக குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
உத்தர பிரதேசத்தில், மதுரா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழு மாத குழந்தை, ஒருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் காட்சிகளில், அந்த நபர் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை கடந்து செல்வது போல் தெரிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து சர்வ சாதாரணமாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்கிறார். பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலை நோக்கி அவர் ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குழந்தையை தேடும் பணியில் பொலிஸார் பல தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, மதுரா காவல்நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குழந்தையை மீட்க குழு அமைத்து அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரா பொலிஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
ये व्यक्ति रे०स्टेशन मथुरा जं० से अपनी माँ के साथ सो रहे महज 7 माह के बच्चे को उठाकर ले गया।
— SACHIN KAUSHIK (@upcopsachin) August 27, 2022
इस व्यक्ति को पकड़वाने में मदद कीजिये।
आप सिर्फ Retweet कर इसके फ़ोटो/वीडियो को Groups में share कर दीजिये, विशेष कर कासगंज, बदायूँ और बरेली साइड में।
मुझे भरोसा है ये अवश्य पकड़ा जाएगा। pic.twitter.com/fTnuGbSlsi
குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர், மேலும் அவரைப் பற்றிய தகவல்களைப் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரயில்வே பொலிஸ் குழுக்கள் மதுரா மட்டுமின்றி, உத்தரபிரதேசத்தின் அலிகார் மற்றும் ஹத்ராஸ் ஆகிய பகுதிகளிலும் குழந்தையை தேடி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் இருக்கும் போதே குழந்தை கடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.