7 வயது மகனை கொடூரமாக கொன்ற தந்தை: வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பிய கணவர்
மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில், மூன்றாவது மனைவிக்கு தனது 7 வயது மகனை பிடிக்கவில்லை என கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 வயது மகன் கொலை
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில், பிரதீக் என்ற 7 வயது சிறுவனை காணவில்லை என அவரது தாத்தா கடந்த 14ஆம் திகதி பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும் தந்தையோடு சிறுவன் கடைசியாக சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவனின் தந்தை மீது சந்தேகமடைந்த பொலிஸார், அவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் சிறுவனின் தந்தை பிரதீக்கை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
சசிபால் என்ற அவருக்கு மூன்றாவது முறையாக, சில வருடங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. இதனிடையே சசிபாலின் மூன்றாவது மனைவி கர்ப்பமாக இருந்ததால் அவரது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு குழந்தை பிறக்கவே சசிபால் அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
வீடியோ எடுத்த தந்தை
ஆனால் அவரது மனைவி சசிபாலின் மூத்த மகன் வீட்டிலிருந்தால், நான் வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து எப்போதும் தாத்தாவுடன் தூங்கும் பிரதீக்கை, தன்னோடு வந்து தூங்குமாறு சசிபால் அழைத்துள்ளார். அப்போது சசிபாலின் அறையில், சிறுவன் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது டிவி சத்தத்தை அதிகப்படுத்தி விட்டு, தனது மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார்.
மனைவி கணவரது போன் நம்பரை பிளாக் செய்து வைத்திருந்தால் போன் போகவில்லை. பின்னர் தூங்கி கொண்டிருந்த தனது மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும் அதனை வீடியோ பிடித்து மனைவிக்கும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து குற்றவாளியான சசிபாலை கைது செய்து இந்தூர் காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் சொந்த மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.