மனைவியைக் காதலித்த நபர் மீது வழக்குத் தொடர்ந்த கணவர்: நீதிமன்றத்தின் தீர்ப்பு
தன் மனைவியைக் காதலித்த நபரிடம் இழப்பீடு கோரியுள்ளார் தைவான் நாட்டவர் ஒருவர்.
மனைவியைக் காதலித்த நபரிடம் இழப்பீடு
Wei எனும் அந்த நபரின் மனைவி Jie. 2006ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், 15 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.
ஆனால், 2022ஆம் ஆண்டு Jieக்கு தன்னுடன் வேலை செய்யும் Yong என்னும் நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி ஹொட்டல்களில் சந்திக்கத் துவங்கியுள்ளார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் அனுப்பும் குறுஞ்செய்திகளில் கணவன் மனைவி போலவே பேசிக்கொள்ள, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தற்செயலாக அந்த செய்திகளில் சில Jieயின் கணவரான Wei கண்களில் பட்டுள்ளன.
உடனே, தன் மனைவியை காதலிக்கும் நபர் மீது வழக்குத் தொடந்த Wei, அவரால் தனக்கு ஏற்பட்ட மன உழைச்சலுக்காகவும், திருமண உரிமைகளை மீறீயதற்காகவும் 800,000 yuan இழப்பீடு கோரியுள்ளார்.
800,000 yuan என்பது இலங்கை மதிப்பில் 3,39,90,375.20 ரூபாய் ஆகும். நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கு நீதிமன்றம் வர, Jieக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தனக்குத் தெரியாது என வாதிட்டுள்ளார் Yong.
என்றாலும், Yong, Weiக்கு 300,000 yuan, அதாவது, 1,27,46,391.00 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |