ஓடும் ரயிலின் கழிப்பறையில் மாரடைப்பால் 22 வயது இளைஞன் மரணம்
22 வயது இளைஞர் கஜுராஹோ எக்ஸ்பிரஸ் கழிப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது இளைஞன் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஊர் திரும்பும்போது இந்த சம்பவம் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குடும்பத்தினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.
அப்போது ரயில் சித்தோர்கரை அடைவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அக்ஷய் ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து கீழே விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அக்ஷய் திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கழிவறைக்கு சென்று பார்த்தனர்.அங்கு கழிவறை மூடப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் கதவை தட்டி அழைத்தபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
ரயில் அதிகாலை 4.05 மணிக்கு சித்தூர்கர் சந்திப்புக்கு வந்தபோது, குடும்பத்தினர் இது குறித்து ஜிஆர்பிக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபொழுது அங்கு அக்ஷய் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்ஷயை ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவ படிப்பை தொடர அடுத்தவாரம் செர்பியா செல்லவிருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |