ரூபாய் நோட்டுகளை கத்தையாக விழுங்கிய நபர்! வாய்க்குள் கைவிட்டு எடுத்து கைது செய்த பொலிஸ் வீடியோ
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட சப்.இன்ஸ்பெக்டர் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
லஞ்சம்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவர் ஃபரிதாபாத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், சம்பு நாத் என்பவர் தன்னுடைய மாடு காணாமல்போனதாக அவரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அப்போது மகேந்திரா, காணாமல் போன மாட்டைக் கண்டுபிடிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டிருக்கிறார். இதையடுத்து முன்பணமாக ரூ.6000 சம்பு நாத் கொடுத்திருக்கிறார்.
A police sub-inspector in #Faridabad, #Haryana swallowed currency notes, to avoid being trapped by the vigilance team. Reportedly, the cop took a bribe from a person in exchange for initiating action on his complaint of buffalo theft.#SubInspector #MahenderPal #ViralVideo pic.twitter.com/oK3ZIIP2r3
— Hate Detector ? (@HateDetectors) December 13, 2022
வாயில் போட்டு விழுங்கிய காவல்துறை அதிகாரி
மீதமுள்ள பணத்தைப் பிறகு கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் இது குறித்து அவர் புகார் அளித்த நிலையில் மீதம் ரூ. 4000-ஐ அவர் மகேந்திராவிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு பொலிசார் அதிகாரிகள் பிடித்தனர். மட்டி கொண்டதால் அதிர்ச்சியடைந்த அவர் ரூபாய் நோட்டுகளை வாய்க்குள் போட்டு விழுங்கினார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பொலிசார் அவரின் வாயில் கைவிட்டு அந்தப் பணத்தை மீட்டனர். பின்னர் மகேந்திரா கைது செய்யப்பட்டார்.