Uber Auto -வில் ரூ.62 -க்கு பதில் ரூ.7.66 கோடி! இளைஞருக்கு காட்டிய பெருந்தொகை
Uber ஆட்டோவில் புக் செய்த இளைஞர் ஒருவருக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதில் ரூ.7.66 கோடி என்று பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணமே ரூ.7.66 கோடி
இந்திய தலைநகர் டெல்லி, நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா. இவர் வழக்கமாக Uber Auto -வில் பயணித்து வருபவர்.
இந்நிலையில், வழக்கம்போல Uber Auto -வில் புக் செய்த போது கட்டண தொகை ரூ.62 என காட்டியுள்ளது. பின்பு, இவர் பயணிக்க தொடங்கிய போது தான் பிரச்சனை ஆரம்பமாகியது.
அதாவது, "உங்கள் பயணத்திற்காக ரூ.7.66 கோடியை செலுத்த வேண்டும்" என்று என பில் வந்திருக்கிறது. இவர் பயணத்தை கூட முடிக்காத நிலையில் பில் வந்திருக்கிறது.
அதுவும் ரூ.62 க்கு பதில் ரூ.7.66 கோடி கட்ட வேண்டும் என்று வந்ததால் இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
அதில் அவர், "நான் Uber Auto -யை புக் செய்யும்போது ரூ.62 என காட்டியது. ஆனால், பயணத்தை முடிப்பதற்குள் ரூ.7,66,83,762 என கட்டணம் வந்திருக்கிறது. நிலவுக்கு சென்றால் கூட இவ்வளவு ஆகாது. ஒரே இரவில் பணக்காரர் ஆக Uber திட்டமிட்டிருக்கிறது போல" என்று கூறியுள்ளார்.
இதற்கு Uber தரப்பில் இருந்து, "இந்த சிக்கலை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். விரைவில் இது சரி செய்யப்படும். ஆனால் சிறிது நேரம் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |