ஆடம்பர கப்பல் பயணத்தின்போது திடீரென கடலில் மாயமான அவுஸ்திரேலியர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் நியூசிலாந்து பயணத்தின்போது கப்பலில் இருந்து மாயமானது குழப்பத்தை உண்டாக்கியது.
1,750 பயணிகள் பயணிக்கக் கூடிய கப்பல்
டிஸ்னி வொண்டர் என்ற கப்பல் மெல்போர்னில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. 
இந்தக் கப்பல் 11 தளங்களில் 1,750 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையிலானது ஆகும். இதில் மெல்போர்னைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் பயணித்துள்ளார்.
ஆனால் அவர் திடீரென மாயமாகியுள்ளார். சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் படகின் ஓரத்தில் குறித்த நபர் குதித்ததாக அறியப்படுகிறது. இதனால் அந்த கப்பல் நபரைத் தேட டாஸ்மன் கடலில் திரும்பியது.
ஐந்து மணி நேரம் தேடியும்
தெர்மல் இமேஜிங் கமெராக்கள் உட்பட தண்ணீரில் ஐந்து மணி நேரம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இதன் காரணமாக, நவம்பர் 26ஆம் திகதி திட்டமிடப்பட்டதை விட ஒருநாள் தாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் டிஸ்னி வழங்கிய கப்பல் பயணங்களில் ஆக்லாந்திற்கு 5 நாட்கள் என்ற இந்த பயணம் கடைசி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |