40 கி.மீ நடந்தே சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற சீரியல் கொலைகாரன்! 30 சிறுமிகள் பலி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், 30க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்து கொன்ற சீரியல் கொலைகாரனது செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீரியல் கொலைகாரன்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரவீந்தர் குமார் என்ற நபர், அதீத போதையில் சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@istock
ரவீந்தர் குமார் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இக்கொடும் செயலை தொடர்ந்து செய்து வந்துள்ளார். அந்த கொலைகளை செய்ய துவங்குகையில், அவருக்கு வயது 18 என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
2008 ஆண்டிலிருந்து கடந்த 2015 வரை தொடர்ந்து சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்து, கொலை செய்து வந்த இவர் ஏழு ஆண்டுகள் 30 சிறுமிகளை கொலை செய்துள்ளார்.
@represental image
இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை துஷ்பிரோயகம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளி ரவீந்திர குமாரிடம் நடத்திய விசாரணையில் அத்தனை உண்மைகளும் வெளியாகியுள்ளது.
அதிகபட்ச தண்டனை
இந்நிலையில் ரவீந்தர் குமார் தனது 18வது வயதில் குழாய்களை பழுதுபார்க்கும் பணிக்காக, உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லி வந்துள்ளார். பின்னர் போதைக்கு அடிமையான அவர் தினமும் போதையை ஏற்றி கொண்டு, ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
@getty images
அதன் தொடர்ச்சியாக அவர் இரவு நேரங்களில் நடந்தே சென்று, ஏதாவது சிறுமிகளை தேடி அவர்களிடம் அன்பாக பேசி மறைவான இடத்தில், இத்தகைய கொடூர செயல்களை செய்துள்ளார்.
மேலும் 40 கீ.மீ தூரம் வரை கூட நடந்தே சென்று 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால் இறந்த குழந்தைகளின் வயது, குறைந்த பட்சம் 6 முதல் 12 வரை தான் இருக்கும்.
கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவருக்கு, தற்போது அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.