12ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தை... அடுத்து நடந்த எதிர்பாராத சம்பவம்: பதறவைக்கும் ஒரு வீடியோ
வியட்நாமில் பொருட்களை டெலிவரி செய்யும் சாரதி ஒருவர் தனது வாகனத்தில் காத்திருக்கும்போது குழந்தை ஒன்று வீறிட்டு அலறும் சத்தம் கேட்டுள்ளது.
Nguyen Ngoc Manh (31) என்னும் அந்த சாரதி, முதலில் அந்த குழந்தையின் தாய் அதை திட்டுவதால் அது அழுவதாக நினைத்துள்ளார்.
ஆனால், அந்த குழந்தை அலறும் சத்தம் தொடரவே, என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்திருக்கிறார் Manh. அங்கே, ஒரு வீட்டின் 12ஆவது மாடியிலிருந்து, சுமார் 164 அடி உயரத்திலிருந்து ஒரு குழந்தை தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட Manh பதறிப்போய் அந்த வீட்டிற்கு அருகே ஓடியிருக்கிறார்.
சரியாக அந்த குழந்தையின் பிடி தவற, அந்த குழந்தையைத் தாவிப்பிடித்திருக்கிறார் Manh.
?¡HEROICA ATRAPADA!?
— Unicanal (@Unicanal) March 1, 2021
Un repartidor le salvó la vida a una niña de 3 años que cayó del piso 12 de un edificio en Vietnam.
La nena sufrió fracturas en la pierna y en los brazos, pero está viva gracias a la heroica acción de Nguyen Ngoc Manh❤️, quien sufrió un esguince.#VIRAL pic.twitter.com/eI03quT0IM
குழந்தையைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் அதை அணைத்துக்கொள்ள, அப்போதுதான் அதன் வாயிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டதும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார்கள்.
மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது, விழுந்த வேகத்தில், அதன் இடுப்பெலும்பு அதன் இடத்திலிருந்து நகர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைக்கும், கைகளில் சுளுக்கு பிடித்திருந்த Manhக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தை விழும்போது, தனக்கும் ஒரு இரண்டு வயது குழந்தை இருக்கிறது என்ற நினைப்பு தவிர வேறு எதுவும் தன் மனதில் தோன்றவில்லை என்கிறார் Manh.
ஆனால், இந்த சம்பவத்துக்குப் பிறகு வாழ்க்கையே மாறிப்போய்விட்டது என்கிறார் Manh.
ஆம், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய Manhஐ, ஹீரோ என புகழ்ந்து தள்ளுகிறார்கள் மக்கள்.



