வேலை பார்த்து ரூ.2.5 கோடி சேமித்து வைத்த நபர்.., இப்போது ஓய்வு பெறலாமா என ஆலோசனை
ரூ.2.5 கோடி சேமித்து வைத்த நபர் ஒருவர் வேலை பார்த்து சோர்ந்து விட்டதாக கூறி ஓய்வு பெறலாமா என ஆலோசனை கேட்டுள்ளார்.
ஆலோசனை கேட்கும் நபர்
இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ரெட் இட் வலைதளத்தில், "எனக்கு 42 வயதாகிறது, இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டனர்.
அதேபோல எனக்கு வீடோ, காரோ இல்லை. நான் அமெரிக்காவில் பணியாற்றியதால் 62 வயதாகும் போது மாதம்தோறும் 1,000 அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்து சோர்வடைந்து விட்டேன். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாதம் ரூ.50000 செலவுக்கு தேவைப்படுகிறது.
பிக்ஸட் டெபாசிட்டில் உள்ள ரூ.2.5 கோடியை வைத்து இப்போது நான் ஓய்வு பெறலாமா என்ற ஆலோசனையை கேட்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு மனநல காப்பக பேராசிரியர் பூர்ண சந்திரிகா கூறுகையில், "உலகில் பணிச்சூழல் மாறியுள்ளதால் மனச்சோர்வு ஏற்பட்டு பலரும் மன அழுத்தத்துடன் பணிபுரிகின்றனர்.
42 வயது நபர் தான் செய்வது சரியா என்ற குழப்பத்திலேயே இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அவருக்கு தற்போது போதிய இடைவெளி வேண்டும்" என்றார்.
அதேபோல பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் கூறுகையில், "இந்த தொகை தனி ஒருவராக வாழ்வதற்கு சில ஆண்டுகளுக்கு போதுமானது. ஆனால், 60 வயதிற்கு மேல் இந்த தொகை போதாது. எனவே அவர் அவருக்கு வரும் வட்டி வருமானத்தை வைத்து சேமித்து வைக்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |