நாக பாம்புக்கு முத்தமிட்டவாறே ரீல்ஸ் எடுத்த இளைஞர் மரணம்
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாக பாம்புக்கு முத்தமிட்டவாறே வீடியோ எடுத்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்து மரணம்
இந்திய மாநிலமான தெலங்கானா, காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். இவர் பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சிவராஜ் (வயது 20).
தனது தந்தை பாம்பு பிடிக்க செல்லும்போது அதை எப்படி பிடிப்பது என்பது போன்ற விடயங்களை சிவராஜ் கற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இவர், பல சாகசமான வீடியோக்களை தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவரும் ஆவார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்திருப்பதாக கங்காதரருக்கு தகவல் கூறினர். ஆனால், அவர் ஊரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றுள்ளார்.
இதையடுத்து, அங்கு சென்ற சிவராஜ் பாம்பை பிடித்துள்ளார். பின்னர் சிறிது நேரம் பாம்பை வைத்து மக்களுக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.
பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரீல்ஸ் எடுத்தார். ஆனால், அவரது நாக்கில் பாம்பு கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |