ரூ.1000 கடனை 1 கோடியாக திருப்பியளித்த காய்கறி கடைக்காரர் - லொட்டரியால் மாறிய வாழ்க்கை
லொட்டரியால் பரிசு வென்ற காய்கறி கடைக்காரர் ரூ.1000 கடனை 1 கோடியாக திருப்பியளித்துள்ளார்.
ரூ.11 கோடி பரிசு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், கோட்புட்லி நகரில், 32 வயதான அமித் செஹ்ரா காய்கறி கடை நடத்தி வருகிறார்.

சமீபத்தில், பஞ்சாப் மாநிலம், மோகாவிற்குச் சென்றபோது தனது நண்பரிடமிருந்து ரூ.1,000 கடன் வாங்கி, பஞ்சாப் மாநில லாட்டரியின் தீபாவளி பம்பர் 2025 இல் 2 லொட்டரிகளை வாங்கியுள்ளார்.
இதில் தனது மனைவி பெயரில் வாங்கிய லொட்டரியில் ரூ.1000 மட்டும் கிடைத்துள்ளது. தனது பெயரில் வாங்கிய லொட்டரியில், ரூ.11 கோடி பரிசு வென்றுள்ளார்.
ரூ.1000 கடன் 1 கோடியாக திருப்பியளிப்பு
இது குறித்து பேசிய அமித் செஹ்ரா, "எனது துக்கம் அனைத்தும் மறைந்து விட்டது. எனது மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. பஞ்சாப் அரசாங்கத்திற்கும், லொட்டரி நிறுவனத்திற்கும் நன்றி.
நான் ஒரு அனுமன் பக்தர், இதில் தெய்வீக தலையீடு உள்ளது. ஒவ்வொரு நபரின் வறுமையும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டுமென நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ரூ.1000 கடனாக வழங்கிய நண்பரின் 2 மகள்களுக்கும் தலா.ரூ.50 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள பணத்தை தனது குழந்தைகளின் கல்விக்கும், தனது குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கும் செலவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |