மணிப்பூர் முதல்வர் கான்வாய் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்: தொடரும் மோதல்!
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் பாதுகாப்பு கான்வாய் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதல்வர் கான்வாய் மீது தாக்குதல்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின்(Manipur CM N Biren Singh) பாதுகாப்பு கான்வாய் மீது தீவிரவாதிகள் என நம்பப்படும் அடையாளம் தெரியாத சந்தேக நபர்களால் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து கான்வாய் மீத தாக்கியதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் கான்வாய் மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடரும் துப்பாக்கி சூடு
தீவிரவாதிகளின் திடீர் துப்பாக்கி சூட்டை சமாளித்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலை நடத்தினர்.
கோட்லன் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை-53க்கு அருகில் இன்னும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Additional Security Forces rush to the location where CM N. Biren Singh’s security team was ambushed.@NBirenSingh #manipur #ManipurViolence #Violence #BirenSingh #Jiribam #nenewstv pic.twitter.com/l4dF4dKmCT
— nenewslive (@NENEWS24x7) June 10, 2024
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் தற்போது டெல்லியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |