கலவரபூமியான மணிப்பூர்! மேலும் 11 பேர் உயிரிழப்பு..பலி அதிகரிக்கலாம் என அச்சம்
இந்திய மாநிலம் மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவரத்தில் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனக்குழுக்களுக்கு இடையே மோதல்
கடந்த மே மாதம் அரசு வேலை மற்றும் கல்வி இடஒதுக்கீடு தொடர்பில் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தீஸ் ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதல் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் பகுதியில் நேற்றிரவு தாக்குதல் நடந்துள்ளது.
PTI
மேலும் 11 பேர் பலி
இதில் கிராம மக்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ANI
அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பில் உள்ள காவலர்களுக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ANI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |