காட்டுக்குள் தப்பிய மக்கள்... கூட்டு வன்முறையை எதிர்கொண்ட பெண்கள்: இருவரல்ல 8 பேர்கள்
இந்திய மாநிலம் மணிப்பூரில் பெண்கள் இருவரை ஆடைகள் இல்லாமல் ஊர்வலம் நடத்திய சம்பவம் நாடும் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வெறிபிடித்த குழுவினரிடம் சிக்கியது இருவரல்ல 8 பெண்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
8 பெண்கள் கூட்டு துஸ்பிரயோகம்
தொடர்புடைய சம்பவம் மே மாத முதல் வாரத்தில் நடந்துள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
@pti
முகாம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ள பெண் ஒருவர் நூலிழையில் அந்த குழுவினரிடம் இருந்து தப்பியதாகவும், மொத்தம் 8 பெண்கள் கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி, தெருவில் ஆடைகள் இல்லாமல் ஊர்வலம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது கணவர், சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அந்த வன்முறை குழுவினரால் அடித்தே கொல்லப்பட்டதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
40 வயதான அந்த பெண் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பிபின்யம் கிராமத்தை சேர்ந்தவர். மே 3ம் திகதி கலவரம் தொடங்கிய மாலை நேரம், வன்முறை குழு ஒன்று பிபின்யம் கிராமத்தை முற்றுகையிட்டுள்ளது.
பிபின்யம் கிராமமானது குகி பூர்வகுடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். குடியிருப்புகளுக்கு நெருப்பு வைத்த குழு, கிராம மக்களை கொடூரமாக தாகவும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து வனப்பகுதிக்கு மக்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தெருவில் ஊர்வலமாக நடத்தியுள்ளனர்
பகல் விடிந்ததும், அந்த வன்முறை குழு கிராமத்தில் இருந்து வெளியேறியிருக்கும் என நம்பி, திரும்பி வந்த கிராம மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறுபடியும் கிராமத்திற்கு திரும்பிய அந்த குழு தமது கணவரின் சகோதரர், அவரது மகன் மற்றும் 8 பெண்களை கடத்தி சென்று, வனப்பகுதியில் வைத்து கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளது.
@nea
பின்னர் அந்த 8 பெண்களையும் ஆடைகள் இல்லாமல் தெருவில் ஊர்வலமாக நடத்தியுள்ளனர். மட்டுமின்றி, தமது உறவினர்களான ஆண்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வன்முறை சம்பவங்களுக்கு பொலிசாரும் அனுமதி அளித்ததாகவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஆண்களில் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரின் சகோதரர் எனவும், வன்முறையில் ஈடுபட்ட பெரும்பாலானோரை அடையாளம் தெரியும் எனவும் தொடர்புடைய பெண் தெரிவித்துள்ளார்.
மே 18ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதியப்பட்டும், எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ஆனால் இரு பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே, கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |