சிரியா, லிபியா போல்... கொழுந்துவிட்டெரியும் இந்திய மாநிலம்: முன்னாள் ராணுவ அதிகாரி வேதனை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் 40 நாட்களுக்கும் மேலாக பற்றியெரிந்து வரும் நிலையில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டு முன்னாள் ரணுவ அதிகாரி ஒருவர் தமது வேதனையை பதிவு செய்துள்ளார்.
உயிர் மற்றும் சொத்துக்களை
மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நிஷிகாந்த் சிங் இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், நான் ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வரும் மணிப்பூரை சேர்ந்த சாதாரண இந்தியன்.
@News18
மாநிலம் தற்போது மாநிலமாக இல்லை. லிபியா, சிரியா, நைஜீரியா போன்று உயிர் மற்றும் சொத்துக்களை யாரும் எந்த நேரத்திலும் அழிக்கும் வகையில் நிலைமை உள்ளது.
மணிப்பூர் அதன் விளைவுகளை அதுவே சந்திக்க தனித்துவிடப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. யாராவது கேட்கிறீர்களா? என்று பதிவு செய்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாகாணத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பூர்வகுடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்
அதை அங்கு பூர்வகுடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் எதிர்க்கின்றன. இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை சம்பவமாக வெடித்துள்ளது.
@PTI
இந்த வன்முறையில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 100 கடந்துள்ளது. மணிப்பூர் மாகாணத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு இருந்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமை குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரபல ஊடகவியலாளரான கரன் தாப்பர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |