உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இந்திய விமானி; ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கிய நிறுவனம்
mankind pharma contribute 1 crore to pilot smit machchhar:ஃப்ளைதுபாய் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீர செயலை பாராட்டிய மேன்கைண்ட் பார்மா நிறுவனம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்திய விமானி ஸ்மித் மச்சார்
கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி அன்று துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த 174 பயணிகள் அடங்கிய ஃப்ளைதுபாய் விமானத்தை ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.

இதில், அந்த விமானத்தின் விமானியும், இந்தியருமான ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயற்சித்த போது அவரை கோடரியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் சக விமானி.
காயமடைந்த நிலையிலும், விமானிகளின் அறையின் (cockpit) கதவைத் திறந்த ஸ்மித் சத்தமிட, பயணிகள் சிலர் சென்று தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப்போட்டுள்ளார்கள்.
ஒருவழியாக விமானம் பாதுகாப்பாக சவுதி அரேபியாவில் தரையிறங்கியது. இதில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சார், தற்போது துபையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரை பணயம் வைத்து 184 உயிர்களை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ரூ.1 கோடி வழங்கியுள்ள நிறுவனம்
தற்போது முன்னணி மருந்து நிறுவனமான மேன்கைண்ட் பார்மா, அவரின் தீர செயலை பாராட்டி ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேன்கைண்ட் பார்மாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜீவ் ஜுனேஜா,மச்சாருக்கு எழுதிய கடிதத்தில், "ஒரு இந்தியர் இத்தகைய தைரியத்தையும், மனிதாபிமானத்தையும், பொறுப்புணர்வையும் முழு உலகத்தின் முன்பாக வெளிப்படுத்துவதைக் காணும்போது, ஒரு இந்தியராக நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
Capt. Smit Machchhar put his crew and every passenger before himself. That is true leadership.
— Mankind Pharma (@Pharma_Mankind) October 2, 2026
As a humble gesture of gratitude, Mankind Pharma is contributing ₹1 crore to him and his family.
You have made India proud. We salute you. 🇮🇳#CaptSmitMachchhar pic.twitter.com/75pdk5iZqn
நீங்கள் பாதுகாத்த உயிர்களின் மதிப்புக்கோ அல்லது லட்சக்கணக்கானோருக்கு நீங்கள் அளித்த உத்வேகத்திற்கோ எந்தவொரு பணமும் ஈடாகாது.
இந்தப் பங்களிப்பு, உங்கள் துணிச்சலுக்கும் மனிதநேயத்திற்கும் நாங்கள் காட்டும் ஆழ்ந்த மரியாதை, நன்றி மற்றும் போற்றுதலின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தலைவர் சோதிக்கப்படுவதில்லை. உண்மையான சோதனை என்பது, பயம் இயல்பானதாகவும், அழுத்தம் மிக அதிகமாகவும், பலரின் வாழ்க்கை உங்கள் முடிவுகளைச் சார்ந்திருக்கும்போதுமான ஒரு உச்சகட்ட நெருக்கடியான தருணத்தில்தான் வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குஜராத் மாநில அரசு அவரின் வீர செயலை பாராட்டி, 'விசிஷ்ட குஜராத் கரிமா விருது' என்ற விருதை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஸ்மித் மச்சாருக்கு பொருத்தமான தேசிய வீரதீர விருது/தேசிய குடிமக்கள் அங்கீகாரத்திற்காகப் பரிசீலிக்குமாறு இந்திய விமானிகள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.