முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை ஆற்றில் கரைப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை ஆற்றில் இன்று கரைக்கப்பட்டது.
மறைந்த மன்மோகன் சிங்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரின் உடலுக்கு குடியரசு தலைவர் உட்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் டெல்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் 21 குண்டுகள் முழங்க மன்மோகன் சிங்கின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடலுக்கு அவரின் மூத்த மகள் உபிந்தர் சிங் தீ வைத்தார்.
இந்நிலையில், ஏரிவூட்டப்பட்டு அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட அஸ்தி இன்று யமுனை நதிக்கரையில் கரைக்கப்பட்டது.
இதற்காக மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்று காலை யமுனை நதியில் சென்று கரைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |