ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து - 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஓமனில் 3வது சுற்று அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள முக்கிய துறைமுகத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகத்தில் விபத்து
பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் உள்ள பாந்தஸ் அப்பாஸ் நகரில், ஷாஹித் ராஜாஈ துறைமுகம் அமைந்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதியில், சர்வதேச அளவில் முக்கியதுவம் பெற்ற துறைமுகமாக இந்த துறைமுகம் உள்ளது. உலகின் எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு இந்த துறைமுகம் வழியாகத்தான் செல்கிறது.
இந்த துறைமுகத்தில், இன்று சேமித்து வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்கள் திடீரென வெடித்து சிதறியதில், பெரிய கரும்புகை மேகம் காணப்பட்டது.
மேலும், இந்த வெடிப்பின் அதிர்வு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியிலும், உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் பின்னணியில் அமெரிக்கா அரசின் பங்கு இருக்குமா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |