ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்: இறப்பு விகிதத்தை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்
ஆப்பிரிக்காவில் பரவி வரும் மார்பர்க் வைரஸினால் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்பர்க் வைரஸ்
ஆப்பிரிக்க நாடான ஈக்குவடோரின் கினியாவில் மார்பர்க் வைரஸ் என்ற அரிய வகை தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
மார்பர்க் நோய்த் தொற்றின் அறிகுறிகள் எபோலா வைரஸின் அறிகுறிகளை போலவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Marburg outbreak confirmed in #EquatorialGuinea. @WHO is deploying experts to support the national response and facilitating the shipment of diagnostics and personal protective equipment for health workers. https://t.co/1fCQIbq48x
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) February 13, 2023
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
WHO அறிக்கை
மார்பர்க் வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி வழங்கிய தகவலில், மார்பர்க் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றும், இதன் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த வைரஸ் பாதிப்பின் போது நோயாளிக்கு அதிக காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படும், நோய் தொற்று ஏற்பட்ட 7 நாட்களுக்கு பிறகு சிலருக்கு ரத்த கசிவு அறிகுறிகளும் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
Getty
இவை வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவும், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை சிறப்பான தடுப்பூசிகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளியை தொடர்பு கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளியின் உயிரை காப்பாற்ற முடியும் எனவும் மட்ஷிடிசோ மொய்ட்டி குறிப்பிட்டுள்ளார்.