ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் கட்சி ஒன்றின் மீது குற்றச்சாட்டு
பிரான்ஸ் பெண் அரசியல்வாதி ஒருவருடைய கட்சிக்கும் ரஷ்ய ஜனாதிபதியான புடின் மற்றும் ஹங்கேரி பிரதமரான Viktor Orban ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
என்ன பிரச்சினை?
பிரான்ஸ் வலது சாரிக் கட்சியினரான Marine Le Penஉடைய கட்சிக்கும் ரஷ்ய ஜனாதிபதியான புடின் மற்றும் ஹங்கேரி பிரதமரான Viktor Orban ஆகியோருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Marine Le Penஉடைய கட்சி, செக் - ரஷ்ய வங்கி ஒன்றில் 9.4 மில்லியன் யூரோக்கள் கடன் வாங்கியுள்ளதைத் தொடர்ந்தே, இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
அவரது கட்சிக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் ஹங்கேரி பிரதமர் ஆகியோருக்கும் இருக்கும் தொடர்பைப் பயன்படுத்தி அந்த கடன் பெறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மறுப்பு
ஆனால், இந்த குற்றச்சாட்டை Marine Le Pen மறுத்துள்ளார்.
அத்துடன், அவரது கட்சிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் ஹங்கேரி பிரதமர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற விசாரணை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.