போர் நிறுத்தம் தொடர்பாக பாதுகாப்பு உத்திரவாதம் வேண்டும்...உக்ரைன் துணைப் பிரதமர் வேண்டுகோள்!
செய்தி சுருக்கம்:
- மரியுபோல் இரும்பு ஆலைப் பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா.
- போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தமும் ரஷ்யா உக்ரைனுக்கு தெரிவிக்கவில்லை.
- எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தை உக்ரைன் எதிர்பார்கிறது என இரினா வெரேஷ்சுக் தெரிவிப்பு.
மரியுபோலில் போரை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உக்ரைனுக்கு ரஷ்யா வழங்கவில்லை என அந்த நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களாக நீடிக்கும் முற்றுகை தாக்குதலில் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை தவிர்த்து உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை முற்றிலுமாக தனது கட்டுபாட்டுக்குள் ரஷ்ய ராணுவம் கொண்டுவந்துள்ளது.
Right now. Right this minute. Children at #Azovstal are starving. Ukrainian soldiers defending them give their food to the children. They have been under bombings for months. They just want to live. They want to go out and have a normal life.#SaveMariupol #Mariupol #StopRussia pic.twitter.com/KDArASYbwF
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 23, 2022
இதனைத் தொடர்ந்து, மரியுபோல் நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையும் எப்படியாவது தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்ற நோக்கில் அதனை முற்றிகையிட்டு ரஷ்ய ராணுவம் சிறைபிடித்துள்ளனர்.
இதனால் பல நாட்களாக இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 2000 உக்ரைன் ராணுவ வீரர்களும் வெளியேற முடியாமல் திணறி வருகின்றன.
இவ்வாறு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளும் தோல்வி முடிந்தது.
இந்தநிலையில், மரியுபோல் நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்கி இருக்கும் உக்ரைன் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பிற்கு பதிலளித்துள்ள உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக்(Iryna Vereshschuk), மரியுபோலில் போரை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உக்ரைனுக்கு ரஷ்யா வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக BBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா இதுபோன்ற போர் நிறுத்த அறிவிப்புகள் பலவற்றை அறிவித்துள்ளது, ஆனால் அவற்றை இதுவரை ஒருபோதும் முறையாக நடைமுறைப்படுத்தியது இல்லை என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: வானில் பறந்த ரஷ்ய விமானத்தை... அதிரடியாக சுட்டுவிழ்த்திய உக்ரைன் ராணுவம்: வீடியோ ஆதாரம்!
அதனால் ரஷ்யா தற்போது தெரிவித்துள்ள இந்த போர் நிறுத்த அறிவிப்பிற்கு உக்ரைன் எழுத்துப்பூர்வமான ஒப்பந்ததை எதிர்பார்ப்பதாக துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இந்த செய்திக்கான வளம்: BBC