வானில் பறந்த ரஷ்ய விமானத்தை... அதிரடியாக சுட்டுவிழ்த்திய உக்ரைன் ராணுவம்: வீடியோ ஆதாரம்!
- உக்ரைனின் கார்கிவ்-வில் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
-
இந்த தாக்குதலில் இரண்டு ரஷ்ய விமானிகள் பாதுகாப்பாக தப்பினர்.
உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானத்தை உக்ரைனின் ஆயுதப் படை வீரர்கள் வானிலேயே சுட்டுவிழ்த்தியுள்ளனர்.
உக்ரைனின் தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது ராணுவ படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களான டான்பாஸ் மற்றும் கார்கிவ் அகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
In the #Kharkiv region, the Armed Forces of #Ukraine shot down a #Russian plane.
— NEXTA (@nexta_tv) April 25, 2022
According to preliminary information, two pilots managed to eject. Now, #AFU are looking for the pilots. pic.twitter.com/iHq88cxQcO
இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்யாவின் விமானத்தை உக்ரைன் அயுதப் படை தங்களது வான் தடுப்பு ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் உக்ரைனின் ராணுவத்தின் இந்த எதிர்பாரத தாக்குதலில் சேதமடைந்த விமானத்தில் இருந்த இரண்டு ரஷ்ய விமானிகள் பறக்கும் பலுன்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேறியதை அடுத்து அவர்களை தேடும் பணியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா: ராணுவ படைகள் பாதுகாப்பான துரத்திற்கு பின்னெடுப்பு!
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் ரஷ்ய வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறியது தொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
இந்த செய்திக்கான வளம்: NEXTA