போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா: ராணுவ படைகள் பாதுகாப்பான துரத்திற்கு பின்னெடுப்பு!
செய்தி சுருக்கம்:
- அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கிய இருக்கும் 2000 உக்ரைனிய ராணுவ வீரர்கள்.
- இரும்பு ஆலையில் பதுங்கிய இருக்கும் பொதுமக்கள் வெளியேறவதற்கு போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக ரஷ்யா போர் நிறுத்ததை அறிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் இரண்டு மாதங்களாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்த நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ரஷ்ய ராணுவம் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது.
மேலும், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கிய இருந்த 2000 உக்ரைனிய ராணுவ வீரர்களையும் சேர்த்து 1000க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களையும் ஆலைக்குள்ளேயே வைத்து வெளியேற முடியாத அளவிற்கு ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்தது.
ரஷ்ய ராணுவத்தின் இந்த சிறைபிடிப்பு நடவடிக்கையால் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்த பொதுமக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகுந்த வேதனையில் அவதிப்பட்டனர், இவர்களை மிட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் முயற்சி செய்தும் அவை தோல்வியையே சந்தித்தன.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணுவ உதவிகள் தாக்குதலை தீவிரப்படுத்தும்...அமெரிக்காவை கண்டித்து கடிதம் அனுப்பிய ரஷ்யா!
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைன் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான தொலைவிற்க்கு பின்னகர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்திக்கான வளம்: BBC