ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள்! போட்டுடைத்த நகர கவுன்சில்
ஆயிரக்கணக்கான மரியுபோல் குடியிருப்பாளர்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுகிறார்கள் என்று நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
மரியுபோலின் Levoberezhny மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாக மரியுபோல் நகர கவுன்சில் கூறியுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவதற்கு மத்தியில், இன்றுவரை மரியுபோல் நகரத்தில் வசிக்கும் 15,000 பேர் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வலுக்கட்டயமாக பேருந்துகளில் பிராந்தியத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், பின் நாடுகடத்தப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
நடுவானில் ரஷ்யா ஹெலிகாப்டர்களை சுட்டு சுக்குநூறாக்கிய உக்ரைன்! வெளியிட்ட வீடியோ ஆதாரம்
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில், மரியுபோல் நகரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரியுபோலை கைப்பற்றினால், ரஷ்யாவால் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மற்றும் கிரிமியாவிற்கு இடையே சாலையை உருவாக்க முடியும்.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மற்றும் கிரிமியா ஆகிய பிராந்தியங்கள் ஏற்கனவே ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..