நடுவானில் ரஷ்யா ஹெலிகாப்டர்களை சுட்டு சுக்குநூறாக்கிய உக்ரைன்! வெளியிட்ட வீடியோ ஆதாரம்
நடுவானில் ரஷ்யா ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது 29வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள்! போட்டுடைத்த நகர கவுன்சில்
இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய ஹெலிகாப்டர்களை உக்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு நீக்கிய ட்விட்டர் பதிவில், கெர்சனில் உக்ரைன் ஆயுதப்படைகளின் தரைப்படையின் வான்பாதுகாப்பு, ரஷ்யாவின் நான்கு k-52 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்திருந்தது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உடனே வீடியோவை நீக்கியதால், குறித்த வீடியோவின் உண்மைதன்மை கேள்விகுறியாக உள்ளது.
This morning, four K-52 helicopters of the Armed Forces of #Ukraine skillfully liquidated the air defense calculations of the Land Forces of the Armed Forces of Ukraine in the #Kherson direction. pic.twitter.com/MZWClaFLEw
— Ukraine Update ?? (@Ukrain_War) March 24, 2022