பாரிய ஆபத்து வரப்போகிறதா? தீவில் இரகசிய Bunker கட்டும் கோடீஸ்வரர் Mark Zuckerberg
ரூபா 8000 கோடி செலவில் நிலத்தடி பதுங்கு குழியை கட்டுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்.
Hawaii தீவுகளில் உள்ள கவாய் தீவில் (Kauai) Meta நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) ரகசிய பதுங்கு குழி (Underground Bunker) ஒன்றை உருவாக்கி வருகிறார்.
5,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த பாதுகாப்பான பதுங்கு குழி வீட்டைக் கட்ட, மார்க் 260 மில்லியன் டொலர்கள் செலவழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது இலங்கை பணமதிப்பில் ரூபா 8000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த பதுங்கு குழியின் கட்டுமானத்தை அவர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்.
2014 முதல், ஜுக்கர்பெர்க் இந்த தீவில் பல கட்டங்களில் நிலத்தை வாங்கி 1,400 ஏக்கர் பரப்பளவில் ஒரு பாரிய தோட்டத்தை நிறுவியுள்ளார். இதில் தற்போது பதுங்கு குழி ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
1000 கோடீஸ்வர விருந்தினர்கள்., 2500 வகை உணவுகள்., உணவுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்த அம்பானி குடும்பம்
பல கோடீஸ்வரர்களுக்கான பதுங்கு குழிகள்
மார்க் ஜுக்கர்பெர்க் மட்டுமின்றி பல பில்லியனர்களும் தற்போது தீவுகளில் எஸ்டேட் அமைத்து வருகின்றனர்.
தோட்டங்களில் சகல வசதிகளுடன் கூடிய பதுங்கு குழிகள் மற்றும் இரகசிய இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
Bill Gates, Oprah Winfrey, Richard Branson, Larry Page, Jeff Bezos, Marc Benioff போன்ற பில்லியனர்கள் ஏற்கனவே பல்வேறு தீவுகளில் ஏராளமான நிலங்களை வாங்கியுள்ளனர்.
இவற்றில் பதுங்கு குழிகள் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இப்போது அதன் தேவை என்ன?
தொலைதூர தீவுகளில் பணக்காரர்கள் அனைவரும் ஏன் பதுங்கு குழிகளை உருவாக்குகிறார்கள்? இப்போது அதன் தேவை என்ன? என்பது தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பதுங்கு குழிகள் கட்டப்படுவதாக முக்கியமாகக் கேட்கப்படுகிறது.
அந்தஸ்து சின்னமாக பதுங்கு குழிகள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், பில்லியனர்கள் பதுங்கு குழிகளை உருவாக்க தொலைதூர தீவுகளை அதிகளவில் தேர்ந்தெடுக்கின்றனர்.
அரசாங்கங்களின் குறுக்கீடு குறைவு, போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் போர்களுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பில்லியனர்கள் இந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை என்று கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mark Zuckerberg Underground Bunker, Bill Gates, secret Bunker