AI தொழில்நுட்பத்தில் கவனம்... திகைக்க வைக்கும் சம்பளத்தை அறிவித்த மார்க் ஜுக்கர்பெர்க்
ஒரு சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை உருவாக்கும் முயற்சியில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரூ.855 கோடி சம்பளம்
சரியான நபர்களுக்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக அளிக்கவும் தயாராக இருக்கிறார். இது மட்டுமல்லாமல், அவர் தனது லட்சியத் திட்டங்களில் மிகவும் தீவிரமாக இருப்பதால், தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி வருகிறார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனது லட்சிய AI திட்டத்தை செயல்படுத்தக்கூடிய சரியான நபருக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.855 கோடி சம்பளத்தை வழங்கும் முடிவிற்கும் வந்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் அனைத்து சாத்தியங்களையும் வசப்படுத்தி அதை ஆதிக்கம் செலுத்தவும் திட்டமிட்டுள்ள மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகவும், நேரடி தகவல்களை அனுப்பியும், தனிப்பட்ட சந்திப்புகளையும் நடத்தியுள்ளார், மேலும் நீண்ட உரையாடல்களை நடத்தியுள்ளார்.
முன்னர் Scale AI என்ற நிறுவனத்தில் 14 பில்லியன் டொலர் முதலீடு செய்ததுடன், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை தமது குழுவில் சேர்த்துக்கொண்டார். தற்போது அவரே மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய AI குழுவை வழிநடத்துகிறார்.
இணை நிறுவனரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
இது தவிர Perplexity நிறுவனத்தின் இணை நிறுவனரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரையும் தொடர்புகொண்டுள்ளார். தொடக்கத்தில் OpenAI நிறுவனத்தின் முதன்மையான சில ஊழியர்களை தமது குழுவில் இணைத்துக் கொல்ள மார்க் ஜுக்கர்பெர்க் முயற்சிகள் முன்னெடுத்துள்ளார்.
ஆனால் OpenAI தலைமை நிர்வாக அதிகாரியான Sam Altman தெரிவிக்கையில், அவரது முக்கிய ஊழியர்கள் யாரும் ஜுக்கர்பெர்க் அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் உருவாக்க இருக்கும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் திட்டம் தொடர்பில் உரிய விளக்கமளிக்கப்படவில்லை என்பதாலையே, அந்த வாய்ப்பை பலர் நிராகரித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |