30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கு திருமணம்! தடபுடலாக விருந்து வைத்த குடும்பம்
இந்திய மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு நடந்துள்ளது.
சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ, திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டாலோ அவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு இந்தியாவின் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மோட்சம் அடையும் என்று நம்பப்படுகிறது. பிரேத திருமணம் எனப்படும் இந்த சடங்கு கர்நாடக மாநிலம் தட்சினா கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ளது.
உண்மையாக நடக்கும் திருமணத்தை போல பல சடங்குகள் இதில் கடைபிடிக்கப்பட்டன. இரு இருக்கைகள் அமைக்கப்பட்டு, அதில் மணமகன் மற்றும் மணமகளின் ஆடைகள் வைக்கப்பட்டன.
அதன் பின்னர் சில கலாச்சார சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்த ஆடைகளுடன் மணமகன், மணமகள் சார்பில் இருதரப்பு உறவினர்கள் ஏழு முறை சுற்றி வந்தனர்.
I reached a bit late and missed the procession. Marriage function already started. First groom brings the 'Dhare Saree' which should be worn by the bride. They also give enough time for the bride to get dressed! pic.twitter.com/KqHuKhmqnj
— AnnyArun (@anny_arun) July 28, 2022
இந்த திருமண நிகழ்வில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வறுவல், இட்லி ஆகியவை இடம்பெற்றன. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர், திருமண சடங்குகள் குறித்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து, தானும் இதில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
Finally the bride's family passing the responsibility of their daughter to the grooms family. Usually the most emotional part of the marriage ceremony. pic.twitter.com/giEZtOl2fa
— AnnyArun (@anny_arun) July 28, 2022