தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்! மணமகள் செய்த தரமான சம்பவம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் திருமணத்தில் இருந்து ஓடிய மணமகனை விரட்டிச் சென்று, பெண் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்தது.
இரண்டரை ஆண்டு காதல்
உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணொருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஒருவழியாக இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பூதேஸ்வர் நாத் கோயிலில் திருமணம் முடிவு செய்யப்பட்டது.
Dailythanthi
விரட்டிப் பிடித்த மணப்பெண்
இந்த நிலையில் திருமண நாளில் மணமகன் திருமண மேடைக்கு வரவில்லை. போனில் தொடர்புகொண்டு காதலி பேசியபோது அவர் மழுப்பலாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மணப்பெண் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பேருந்தில் 20 கிலோ மீற்றர் பயணித்து மணமகனை விரட்டி பிடித்துள்ளார். அதன் பின்னர் அவரை கோயிலுக்கு இழுத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பேசுபொருளானது.