அதிகம் படித்து கைநிறைய சம்பாதித்த ஆசிரியை! ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்
தமிழகத்தில் மனைவி தன்னை விட அதிகம் படித்து நிறைய சம்பாதிக்கிறார் என்ற கோபத்தில் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைநிறைய சம்பாதிக்கிறாரே
நாமக்கல் மாவட்டம் தூசூர் பஞ்சாயத்து சம்பா மேட்டை சேர்ந்தவர் ராஜா (40) ஓட்டுனர். இவரது மனைவி பிரமிளா (35). நாமக்கல் ரெட்டிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மனைவி தன்னை விட அதிகம் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிக்கிறாரே என தாழ்வு மனப்பான்மை ராஜாவிடம் இருந்து வந்தது.
இது தொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரமிளாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட ராஜா அது குறித்து அவரிடம் சண்டை போட்டு வந்தார்.
வெட்டி கொலை
இதையடுத்து நேற்று காலை தம்பதி இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜா, பிரமிளாவை வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் நாமக்கல் நகர பொலிசார் சரணடைந்தார்.
மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.