விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனம் அக்டோபர் 2025-ல் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான விற்பனையை பதிவு செய்து, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது.
கடந்த மாதம் மட்டும் 2,20,894 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மாதாந்திர விற்பனை ஆகும்.
இந்த சாதனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஏற்பட்ட வாகன தேவை அதிகரிப்பும், மற்றொன்று நிறுவனத்தின் சிறிய கார்கள் மற்றும் யூட்டிலிட்டி வாகனங்களுக்கு உள்ள வாடிக்கையாளர் விருப்பம் ஆகும்.
அக்டோபரில் உள்நாட்டில் மட்டும் 1,80,675 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பயணியர் மற்றும் லைட் கமெர்ஷியல் வாகனங்கள் இரண்டும் அடங்கும்.

மேலும், மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு 8,915 யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 31,304 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சிறிய கார் பிரிவில் Baleno, Swift, WagonR, Dzire, Celerio மற்றும் Ignis ஆகியவை 76,143 யூனிட்கள் விற்பனையை பெற்றுள்ளன.
Alto மற்றும் S-Presso ஆகியவை சேர்ந்த மினி பிரிவு 9,067 யூனிட்கள் விற்பனையை பெற்றுள்ளது.
Brezza, Ertiga, Fronx, Grand Vitara, Invicto, Jimny, Victoris மற்றும் XL6 ஆகிய யூட்டிலிட்டி வாகனங்கள் 77,571 யூனிட்கள் விற்பனையை பெற்றுள்ளன.
Eeco van 13,537 யூனிட்கள் மற்றும் Super Carry லைட் கமெர்ஷியல் வாகனம் 4,357 யூனிட்கள் விற்பனையை பெற்றுள்ளன.
2025 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, மொத்த உள்நாட்டு விற்பனை 10.6 லட்சம் யூனிட்களாகவும், ஏற்றுமதி 2.38 லட்சம் யூனிட்களாகவும் இருந்தது. மொத்தமாக 12.99 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki October 2025 sales, highest monthly car sales India, Maruti compact car demand, utility vehicle sales Maruti, Maruti Suzuki Brezza Ertiga, festive season car sales India, Maruti exports October 2025, Indian auto industry growth, Maruti Suzuki sales report, top car brands India 2025