சிறையில் இருந்து வந்து சாலையில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: சுட்டுப் பிடித்த காவலர்
அமெரிக்காவில் காரில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி ஏந்திய நபர்
அமெரிக்காவின் Massachusetts-யில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டார்.

பரபரப்பான சாலையில் கார்கள் மீது அவர் திகிலூட்டும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். 50 முதல் 60 முறை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்நபரை மாநில காவலர் மற்றும் முன்னாள் கடற்படை வீரரான ஒருவராலும் சுடப்பட்டு காயமடைந்தார். பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு
முதற்கட்ட விசாரணையில் அவர் 46 வயதான டைலர் பிரவுன் என்று தெரிய வந்தது. 2020ஆம் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின் 2021யில் கொலை முயற்சி குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இதுபோன்ற ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரவுன், விடுதலையான பிறகு இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியிருக்கிறார்.
ஒரு சலுகை ஒப்பந்தத்தின் பேரில் சிறையில் இருந்து விடுதலையான அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிரவுன் துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |