வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணம்: ஏவுதளத்திற்கு சென்ற ரொக்கெட்
நாசாவின் நிலவுப் பயணத்திற்கான Countdown தொடங்கிய நிலையில், மில்லியன் பவுண்டுகள் எடையுள்ள ரொக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நாசாவின் திட்டம்
1972யில் அப்பல்லோ 17 பயணத்திற்குப் பிறகு, மீண்டும் நிலவிற்கு பயணிக்கும் நாசாவின் திட்டம் தொடங்கியுள்ளது.
Getty Images
50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முதல் நிலவுப் பயணத்திற்கான Countdown, சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
நிலவை சுற்றிவரும் இந்த பயணத்திட்டதிற்காக, பிப்ரவரி 6ஆம் திகதி அன்று ஆர்டெமிஸ் II ரொக்கெட் ஏவப்பட உள்ளது.
11 மில்லியன் பவுண்டுகள் எடையுள்ள இந்த ரொக்கெட், நாசாவின் வாகன ஒருங்கிணைப்புக் கட்டிடத்தில் உள்ள அதன் இருப்பிடத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 மணிநேர மெதுவான பயணத்திற்குப் பிறகு, புளோரிடாவில் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதளத்தை அடைந்தது.
Brooke Edwards/USA TODAY NETWORK via Imagn Images
2027யில்
புவியின் தாழ்வட்டப் பாதையை விட்டு வெளியேறும் முதல் மனிதர்கள் பயணிக்கும் பயணம் இது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா கூறுகையில், "ஆர்டெமிஸ் II நிலவில் தரையிறங்காது. 2027யில் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால ஆர்டெமிஸ் III பயணம்தான், மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதாரப் பலன்கள் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான முதல் மனிதப் பயணங்களுக்கு அடித்தளம் அமைப்பதற்காக, விண்வெளி வீரர்களை நிலவை ஆராய அனுப்புவது ஆர்டெமிஸ் திட்டமாகும்" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |