இமயமலை பனிச்சரிவு... டசின் கணக்கானோர் மாயம்: 16 பேர்கள் மீட்பு
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிச்சரிவு காரணமாக குறைந்தது 41 சாலைப் பணியாளர்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உறுதியான தகவல்
பனிச்சரிவில் சிக்கிய ஊழியர்களில் 16 பேர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பார்னே தெரிவித்துள்ளார்.
திபெத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உத்தரகாண்டில் உள்ள மானாவில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் முகாம் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றே மூத்த மாவட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை, BRO மற்றும் பிற குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி செய்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசரகால குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் மிக மோசமான நிலைமைகள் மீட்புக் குழுவினருக்கு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்ரிநாத் கோவில்
மீட்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள கர்னல் அங்கூர் மகாஜன், அவர்கள் காயங்களின் நிலை குறித்து தெளிவான தகவல் இல்லை என தெரிவித்துள்ளார்.
பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் யாரும் நிரந்தரமாக வாழ்வதில்லை. இது ஒரு புலம்பெயர்ந்த பகுதி மற்றும் எல்லைச் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே குளிர்காலத்தில் அங்கு தங்குவார்கள் என மானா பகுதியின் முன்னாள் கிராம சபை உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டு நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதாகவும், பனிச்சரிவு ஏற்பட்டபோது சாலைப் பணியாளர்கள் முகாமில் இருந்தனர் என்பதும் தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்
பத்ரிநாத் கோவிலில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்லைக் கிராமமான மானா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |