ஜப்பான் தீவில் கோரத் தீ விபத்து: நாசமடைந்த 170க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்
ஜப்பான் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நாசமடைந்துள்ளன.
ஜப்பானில் தீ விபத்து
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஓய்தா நகரத்தின் சாகனோசெகி மாவட்டத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தும், அழிந்தும் போயுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள ஓய்தா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இந்த தீ விபத்தானது தொடங்கியது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், தீ மிகப்பெரிய அளவில் பரவியதற்கு அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளது.
தீ விபத்து தொடர்பாக வெளியான வான்வழிப் புகைப்படங்களில் குடியிருப்பு பகுதிகள் சிதைந்து இருப்பதையும், மலைப்பகுதிகளில் அடர்ந்த கரும்புகை எழுவதையும் பார்க்க முடிகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |