உக்ரைனில் தீவிரமடையும் போர்! ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன? கசிந்த முக்கிய தகவல்
உக்ரைனில் ஒரு பக்கம் போர் வெடித்து வரும் நிலையில் ரஷ்யா எடுத்த முக்கிய முடிவு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் ரஷ்யாவில் தொடர்ந்து போர் வெடித்து வருகின்றது. நேட்டோ அமைப்பு உக்ரைன் நாடுடன் சேர்வதை தடுத்து நிறுத்தும் வகையில் சுமார் 8 நாட்களாக இடைவிடாமல் ரஷ்யா போர் தொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் இரு நாடுகளிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதையடுத்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத முடிவை ரஷ்யா எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தற்போதைய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சை புதிய அதிபராக நியமிக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதனால் ஜெலன்ஸ்கி அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை போர் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.