மேக்ஸ்வெல், வினி ராமன் திருமணம்: வைரலாகும் தமிழ் பாரம்பரிய திருமண சடங்கு வீடியோ காட்சிகள்!
பிரபல அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் இருவருக்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமண சடங்குகள் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
பிரபல அவுஸ்திரேலிய வீரரும் தற்போதைய ஐபிஎல்-லில் பெங்களூரு அணியின் அதிரடி வீரரும் ஆன மேக்ஸ்வெல் தமிழ் சம்சாவளி பெண்ணான வினி ராமனை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் இருவரும் சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் இருவருக்குமான திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, முதலிலேயே திட்டமிட்ட படி இருவரின் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இரண்டு முறைகளிலும் திருமண சடங்குகளை நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.
அந்தவகையில் கடந்த வாரம் அவுஸ்திரேலிய பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்ற முடிந்தது, மேலும் அதுகுறித்த புகைப்படத்தை வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு "மனைவி மற்றும் கணவன் சிறப்பான விசயங்கள் வந்து கொண்டிருக்கிறது" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழ் பாரம்பரிய முறைப்படி மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமனின் இருவருக்குமான திருமண மாலை மாற்றிக்கொள்ளும் திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது.
Vanakam da Mapla @Gmaxi_32 ??#WhistlePodu | #IPL2022 pic.twitter.com/wRVdrUrGv6
— CSK Fans Army™ ? (@CSKFansArmy) March 28, 2022
இதற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான திருமணம் குறித்து தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட திருமண அழைப்பிதழ் கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது மேக்ஸ்வேல்-லுக்கும் வினி ராமனுக்கும் நடத்தப்பட்ட தமிழ் பாரம்பரிய திருமண சடங்கு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
மேக்ஸ்வெல் திருமண சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாள்களில் அவர் ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு இவ்வளவு தலைக்கனமா? தோனியின் உண்மை முகத்தை போட்டுடைத்த பயிற்சியாளர்