குருதியை வியர்வையாக்கும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரமுகர்கள்
இன்று மே தின கொண்டாட்டம் குறித்து தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரமுகர்கள் பகிர்ந்துள்ளனர்.
வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரமுகர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும், வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் வாழ்த்திப் போற்றுவோம்!
மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
— M.K.Stalin (@mkstalin) May 1, 2024
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…
கமல்ஹாசன்
உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.
உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.
— Kamal Haasan (@ikamalhaasan) May 1, 2024
உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.#MayDay
விஜய்
உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.#MayDay2024 #LabourDay pic.twitter.com/HZ9Zp0nKMn
— TVK Vijay (@tvkvijayhq) May 1, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |