ஒரு வார்த்தையால் சீனாவின் கோபத்திற்கு ஆளான எம்பாப்பே: முறிந்த ஒப்பந்தங்கள்
Kylian mbappe apology for chinese dictator word: சீனாவின் மாவோ சேதுங்கை சர்வாதிகாரி என்று எம்பாப்பே குறிப்பிட்டது சர்ச்சையானது.
பிரான்ஸ் கால்பந்து வீரரான கிலியன் எம்பாப்பே, சீனாவின் மாவோ சேதுங்கை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டதால் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
கிலியன் எம்பாப்பே
பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே, பிரெஞ்சு நிகழ்ச்சியான தி பிரிட்ஜ்-யில் பேசிய விடயம் சர்ச்சையானது.
அந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு காணொளி பரவியதில், கம்யூனிஸ்ட் தலைவரான மாவோ சேதுங்கை 'சர்வாதிகாரி' என்று குறிப்பிட்டிருந்தார்.
மாவோவின் முகத்தின் மீது தனது முகத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்ட ஒரு மீம் குறித்து எம்பாப்பே அவ்வாறு விவாதித்திருந்தார்.
எம்பாப்பேவின் இந்த காணொளிக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் விளைவாக விளம்பரதாரர்கள் எம்பாப்பே உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர். மேலும், எம்பாப்பேயின் ஸ்பானிய கால்பந்து ஒளிபரப்புகளும் தடைபட்டுள்ளன.

மன்னிப்பு
அத்துடன் அவரது மன்னிப்பு இறுதியில் அவரது செயல்களின் மூலமே மதிப்பிடப்படும் என்று, சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் திகதி அன்று எம்பாப்பே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் சீன, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தனது கருத்துக்கள் தவறாக மதிப்பிடப்பட்டவை என்றும், அவை உலகெங்கிலும் உள்ள பல சீன சமூகங்களைப் புண்படுத்தியுள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
