வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
ஈரானில் வேலைவாய்ப்பு தொடர்பில், இந்திய வெளியுறவு அமைச்சகம் தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
சமீப காலமாக இந்தியர்கள் பலர் ஈரானில் அல்லது மூன்றாம் நாடு ஒன்றில் வேலை இருப்பதாக போலி விளம்பரங்கள் மூலம் ஈரானுக்கு அழைக்கப்படுவதாகவும், அங்கு சென்றவர்கள் கடத்தல் கும்பல்களால் கடத்தப்பட்டு பின்னர் அவர்களை விடுவிக்க பிணைத்தொகை கேட்டு மிரட்டப்படுவதாகவும் பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
ஆகவே, இத்தகைய வேலைவாய்ப்பு குறித்த அழைப்புகள் குறித்து இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும், ஈரான், இந்தியர்களுக்கு சுற்றுலாவுக்காக மட்டுமே விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுமாறும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |