ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தின் விலை இத்தனை கோடியா? மிரள வைக்கும் மதிப்பு
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரம் குறித்த விவரம் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட திருமணம்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. உலகளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.
தற்போது ஆனந்த் அம்பானியின் திருமணம் தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் குறிப்பாக அவர் அணிந்துள்ள உயர் ரக கைக்கடிகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதான் இணைய வாசிகள் அதிகம் தேடப்படும் பொருளாகவும் உள்ளது.
மதிப்பு ரூ.22 கோடி
இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.22 கோடி என்று தகவல் ஒன்று வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Richard Mile RM52-04 Skull Blue Sapphire எனும் பிராண்ட்டின் இந்த கைக்கடிகாரம் அரிதான ஒன்றாம்.
ஏனெனில், உலகிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட இந்த கைக்கடிகாரத்தின் எண்ணிக்கை 3 மட்டும்தான் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |