பெண் உடலில் குளூக்கோஸுக்கு பதிலாக ஏற்றப்பட்ட இறந்த உடலை பதப்படுத்தும் இரசாயனம்: ஒரு அதிர்ச்சி செய்தி
ரஷ்யாவில், அறுவை சிகிச்சை ஒன்றிற்காக சென்றிருந்த இளம்பெண் ஒருவர் உடலில், குளூக்கோஸுக்கு பதிலாக ஃபார்மலின் ஏற்றப்பட்டதால் துடிதுடித்து உயிரிழந்துள்ளார் அவர்.
அறுவை சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் Ekaterina Fedyaeva (27) என்ற இளம்பெண் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து கொண்டுவரப்பட்ட Ekaterinaவின் கால்கள் நடுங்கிக்கொண்டே இருப்பதை கவனித்த அவரது தயாராகிய Galina Baryshnikova, அவருக்கு சாக்ஸ் அணிவித்தும் நடுக்கம் நிற்காமல் போகவே, பிறகு போர்வையால் அவரைப் போர்த்தியுள்ளார்.
Image: east2west news
வெகு நேரமாக Ekaterinaவின் உடல் நடுங்கிக்கொண்டேஇருக்க அவரது தாயும், கணவரான Igorம் மருத்துவர்களைக் காணச்சென்றுள்ளார்கள். அப்போது, மருத்துவர்கள் கூடி ஏதோ விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
நடந்தது என்ன?
என்ன நடந்தது என Ekaterinaவின் தாயாகிய Galina கேட்க, ஒரு தவறு நடந்துவிட்டது, Ekaterinaவின் நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவை செயலிழந்துவிட்டன. அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என கூறியுள்ளார் பெண் மருத்துவர் ஒருவர்.
உடனடியாக Ekaterina வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அங்குள்ள மருத்துவர்கள்தான், அவருக்கு குளூக்கோஸ் ஏற்றுவதற்கு பதிலாக தவறுதலாக ஃபார்மலின் ஏற்றப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
Image: east2west news
ஃபார்மலின் என்பது, இறந்த உடலைப் பதப்படுத்துவதற்கான ஒரு ரசாயனம் ஆகும். ஆக, Ekaterina உயிரோடிருக்கும்போதே அவரது உடலைப் பதப்படுத்தும் ரசாயனத்தை மருத்துவர்கள் அவர் உடலில் ஏற்றியதால், அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இரண்டாவதாக Ekaterina சேர்க்கப்பட்ட மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், அந்த ரசாயனத்தை அவரது உடலிலிருந்து வெளியேற்ற, 52 மருந்துகள் உதவியுடன் முயன்றும், அவர்களுடைய முயற்சி பலனளிக்காமல் கோரமாக மரணமடைந்துள்ளார் அவர்.
Image: east2west news
மருத்துவர்கள் இது கவனக்குறைவு என்கிறார்கள். Ekaterinaவின் தாயாகிய Galinaவோ, இது கொலை என்கிறார். தவறு செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |