கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?
பல மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் வேலையை துறந்து விட்டு, ஐஐடி பட்டதாரி ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்கி இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்.
வேலை துறந்த ஐஐடி பட்டதாரி
ஐஐடி-யில் பட்டம் பெற்ற சஞ்சீவ் பர்ன்வால்(Sanjeev Barnwal) என்ற இளைஞர் 10,32,259 கோடி சொத்து மதிப்பு கொண்ட சோனி(Sony) நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சோனி நிறுவனத்தின் கோர் டெக் குழுவுடன் ஜப்பான் சென்ற சஞ்சீவ் பர்ன்வால் தன்னுடைய அறிவை விரித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் ஓயாமல் எரிந்து கொண்டு இருந்த தொழில் முனைவோர் ஆர்வம் அவரை முன் நகர்த்தி சென்றது.
sanjeev barnwal
இதற்கிடையில் அவருக்கு கிடைத்த விதித் ஆத்ரே (Vidit Aatrey) என்பவருடனான நட்பையும் பேணி காத்து வந்துள்ளார்.
இவர் பெங்களூருவில் InMobi என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் இணைந்து புதிய தொழிலை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
2015ம் ஆண்டு சஞ்சீவ் மற்றும் விதித் இருவரும் தங்களுடைய வேலையை விட்டு விட்டு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தளத்தை உருவாக்க ஸ்டார்ட் அப் திட்டத்தை உருவாக்கினார்.
2.1 பில்லியன் டொலர் சொத்து
நண்பர்கள் சஞ்சீவ் பர்ன்வால் மற்றும் விதித் ஆத்ரே இருவரும் இணைந்து மீசோ(Meesho) என்ற ஆன்லைன் வணிக சந்தையை உருவாக்கினர். இந்த மீசோ ஆன்லைன் வணிக சந்தை வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், மறு விற்பனையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான வர்த்தகத்தை எளிதாக்கியது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக பக்கங்களை இந்த ஆன்லைன் வணிக சந்தை பெரும்பாலும் நம்பியுள்ளது. 2015ம் ஆண்டு இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கப்பட்ட மீசோ-வின் மதிப்பு, 2022 டிசம்பரில் 4.98 பில்லியன் டொலர் என ஃபிடிலிட்டியின் நிதிகள்(Fidelity's funds) மதிப்பிட்டுள்ளது.
அதே ஆண்டில் செப்டம்பரில் மீசோ-வின் மதிப்பு 4.29 பில்லியன் டொலராக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் மதிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி பட்டதாரி சஞ்சீவ் பர்ன்வால் புதிய தொழில் தொடங்கும் திட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 2.1 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என Financial Express தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sanjeev Barnwal, Meesho,Vidit Aatrey, Co-founder and CTO of Meesho Sanjeev Barnwal, amazing life journey, IIT, IIT graduate, Sony, innovative, business, startup business, story of two friends, Facebook, marketplace, Instagram,Sony's Core Tech Team, Japan, Money, Businessman