520 கோடிக்கு சொத்து: இளம் வயதில் நிறுவனம் தொடங்கி சாதித்து காட்டிய பெண்மணி யார்?
3000 கோடி ரூபாய் நிறுவனத்தை உருவாக்கிய இளம் பெண் தொழிலதிபர் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உருவாக்கியுள்ளார்.
சாதித்து காட்டிய பெண் தொழிலதிபர்
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று, லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கிய நிறுவனத்தின் வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கிய இளம் பெண் தொழிலதிபர் இன்று இந்தியாவின் முன்னணி பெண் தொழிலதிபர்களில் ஒருவராக சௌமியா சிங்(Saumya Singh) முன்னேறியுள்ளார்.
லண்டனில் உள்ள பிக் ஃபோர் நிறுவனமான KPMG பணிபுரிந்த நிலையில், பிறகு இந்தியாவின் டைம்ஸ் குரூப் நிறுவனத்தில் சௌமியா சிங் பணியாற்றியுள்ளார்.
பவன் நந்தா (Paavan Nanda) என்றவரும் இணைந்து WinZO என்ற நிறுவனத்தை சௌமியா சிங் தொடங்கினார்.
பின் தொடர்ந்த சிறிய படகுகள்.,காணாமல் போன 2 அமெரிக்க மாலுமிகள்: ஹவுதி மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சிறிய கால இடைவெளியிலேயே இந்திய விளையாட்டு தொழில் துறையில் இருவரும் லாபகரமான இடத்தை அடைந்தனர். இவர்களது WinZO விளையாட்டு தொழில் நிறுவனம் கொரோனா பொது முடக்கத்தின் போது உச்ச நிலையை அடைந்தது.
கிட்டத்தட்ட 110.5 மில்லியன் டொலர்கள் கோர்ட்சைட் வென்ச்சர்ஸ், மேக்கர்ஸ் ஃபண்ட் மற்றும் கிரிஃபின் கேமிங் பார்ட்னர்கள் ஆகிய நிறுவனங்கள் WinZO நிறுவனத்தின் மீது முதலீடு செய்தனர்.
2022ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி WinZO நிறுவனத்தை பிரதிநிதித்துவம் படுத்தினார். மேலும் ஐபிஎல்-லில் கொல்கத்தா அணியின் ஸ்பான்சர்ஷிப்பையும் WinZO பெற்றது.
மிகக் குறுகிய கால இடைவெளியில் அதாவது ஜூலை 2021 நிலவரப்படி, WinZO நிறுவனம் சுமார் 366 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டது. மே மாதத்தில் 2023ல் அது 3000 கோடியாக அதிகரித்தது.
மிக சிறிய வயதில் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கிய சௌமியா சிங்(36) சொத்து மதிப்பு சுமார் 520 கோடியாகும். மேலும் இவர் 2023ம் ஆண்டு இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |