பின் தொடர்ந்த சிறிய படகுகள்.,காணாமல் போன 2 அமெரிக்க மாலுமிகள்: ஹவுதி மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளங்களை குறி வைத்து ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் புதியதொரு தாக்குதலை நடத்தியுள்ளது.
செங்கடலில் பதற்றம்
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் தாக்குதலை கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்து வந்தனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இந்த அத்துமீறிய செயலால் செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக அபாயகரமானதாக மாறியது.
AP
இதையடுத்து வெள்ளிக்கிழமை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இணைந்து ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், அமெரிக்கா, பிரித்தானியாவின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என்றும் ஹவுதி எச்சரித்தனர்.
அமெரிக்க படைகள் மீண்டும் தாக்குதல்
இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து மீண்டும் புதிய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு இருப்பதாக 2 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.
U.K. Ministry of Defense/X
ஆதாரம் வழங்கிய தகவலின் படி, அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து ஹவுதி படையினரின் தளங்கள் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான பின் தொடரல்
இதற்கிடையில் ஏமன் அருகில் வணிக கப்பல்களை சந்தேகத்திற்கிடமான சிறிய படகுகள் நெருங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதே சமயம் கப்பல்களை இரண்டு சிறிய படகுகள் 1 மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்தாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) குறிப்பிட்டுள்ளது, ஆனால் அவற்றில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
காணாமல் போன 2 அமெரிக்க கடற்படை
மாலுமிகள் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய அதே சமயம் சோமாலியா கடல் பகுதியில் கடற்படை செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்த 2 அமெரிக்க கடற்படை மாலுமிகள் காணாமல் போய் உள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க தரப்பு, காணாமல் போன 2 அமெரிக்க கடற்படை மாலுமிகளையும் தேடி மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஏமனை சுற்றியுள்ள செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகள் வழியாக அமெரிக்க கொடி ஏந்திய கப்பல்களும் அடுத்த 72 மணி நேரத்திற்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Middle East crisis, Yemen, UK-US strikes, Houthis, UK Prime Minister Rishi Sunak, US forces, Red Sea, US President Joe Biden, United States, world's most critical commercial routes, United Kingdom,Houthi attacks, Houthi, International News, Google