மெகந்தியால் QR Code வரைந்து ரக்ஷா பந்தனுக்கு பணம் வசூலித்த சகோதரி
ரக்ஷா பந்தனையொட்டி கையில் மெகந்தி மூலம் QR Code வரைந்து சகோதரர்களிடம் இருந்து வசூலித்த சகோதரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரக்ஷா பந்தன்
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படும். ராக்கி பண்டிகை என்றும் இப்பண்டிகையை கூறுகின்றனர்.
இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.
பின்பு, சகோதரர்கள் நெற்றியில் குங்குமத்தை வைத்து இனிப்புகளை வழங்குவர். அப்போது, அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரார்கள் பரிசுப்பொருள்கள் வழங்குவர்.
QR Code மெகந்தி
அந்தவகையில், சகோதரி ஒருவர் சகோதரருக்கு பரிசு கொடுக்கும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக கையில் மெகந்தி மூலம் QR Code வரைந்துள்ளார்.
அதன் மூலம், சகோதரர் எளிமையாக பணத்தை அனுப்ப முடியும். இது தொடர்பான வீடியோவை மெகந்தி கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |