ஜார்ஜியா மெலோனியின் பிரதமர் பதவிக்கு வந்த சிக்கல்
இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி முன்வைத்த நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
மெலோனியின் பிரதமர் பதவிக்கு வந்த சிக்கல்
இத்தாலி நாட்டின் பிரதமரான ஜார்ஜியா மெலோனி, இத்தாலி நாட்டின் நீதித்துறை தொடர்பில் சில சீர்திருத்தங்களை செய்ய திட்டமிட்டிருந்தார்.

அது தொடர்பில் அவர் முன்வைத்த வாக்கெடுப்பில், அவரது சீர்திருத்தங்களுக்கு எதிராக 53 முதல் 54 சதவிகிதம் மக்களும், ஆதரவாக 43 சதவிகித மக்களும் வாக்களித்துள்ளார்கள்.
2027ஆம் ஆண்டு இத்தாலியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது பிரதமர் மெலோனிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாலும், அடுத்த தேர்தல் வரை, தான் பிரதமர் பதவியில் தொடரப்போவதாக மெலோனி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |